Tuesday, August 18, 2009

ஜப்பானில் தயாநிதிமாறன்


அமைச்சர் திரு தயாநிதிமாறன் நேற்று (21/07/2009) டோக்கியோ வந்திருந்தார்.
ஜப்பானின் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர் அவர்களை நானும் என்னுடைய நண்பர் பாலமுருகனும் சென்று சந்தித்தோம்.
அமைச்சரை மட்டும் அல்லாமல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள், பெரும் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்களை சந்தித்த இந்த அனுபவம் புதுமையானதாக இருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஜப்பானிய நிறுவனங்களை ஈர்க்க தான் கையாளும் முறையை எடுத்துக்கூறிய அவர், நம் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி பெரிய பிரச்சனையாகும் என்று கருத்து இருந்தது ஆனால் அதுவே இன்று நமக்கு சாதகமாக மாறி பெரிய மனித வள நாடாகவும், மிகப்பெரிய பொருளாதார சந்தையாகவும் உள்ளது. அதிக்கப்படியான படித்த இளைஞர்களை கொண்ட இந்திய சந்தை அதிகம் வாங்கும் சக்தி படைத்தது,
ஆகையால் ஜப்பானிய நிறுவனங்களை தான் அழைப்பது நம் நாட்டில் வந்து பொருள் வாங்குங்கள் என்று சொல்வதற்கு இல்லை மாறாக நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள் முதலீடு செய்யுங்கள் பொருள்களை தயாரியுங்கள் அங்கேயே விற்று பணமாக்கி பணத்தை உங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிய அவர், இது தனது பொருளாதார மந்திரம் எனவும் பெருமையோடு கூறிக் கொண்டார். (ஆஹா என்ன ஒரு பொருளாதாரக் கொள்கை வெள்ளைக்காரன் அவனே வந்து சுரண்டிகிட்டு போனான், அனால் இன்று நம் நாடு சுதந்திரம் அடைந்து கல்வியிலும் மற்றும் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து பல்துறை வல்லுனர்களையும், மேதாவிகளையும் உருவாக்கி, அவர்கள் சென்று அழைகின்றனர் வாருங்கள் எங்கள் நாட்டுக்கு வந்து எங்கள் நாட்டு செல்வங்களை சுரண்டி எடுத்து செல்லுங்கள் என்று )
நண்பர் பாலமுருகன் ஈழத் தமிழ்ர்களைப் பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தி.மு.க ஈழ தமிழார் நலனுக்காக நாங்களும் பாடுபடுவோம் தனி ஈழம் அமைய பாடுபடுவோம் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு அதைப்பற்றி பேசுவே இல்லையே அது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்க்கு பதிலளித்த அமைச்சர்.
நாங்கள் எதுவும் செய்யாமல் இல்லை, இப்போது கூட மத்திய அரசு மூலமாக 500 கோடி கொடுத்துள்ளோம் என்றார்.
போரில் பல பேர் இறந்தும் அதற்கும் பின்பும் 3 லட்சம் தமிழ்ர்கள் முள்வேலிக்குள் அகப்பட்டு தினம் தினம் துன்பத்திற்க்குள்ளாகும் அவலம் தொடர்கிறதே?
ராஜீவ் மரணத்திற்கு பிறகு இலங்கை பிரச்சனையில் நேரடியாக ஈடுபடமுடியவில்லை என்றும்,
ராஜீவ் கொலையில் தாங்களும் (தி.மு.க) குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை தாழ்வாக எண்ணுவதாகவும்,
80 களில் அவர் மாணவராக இருந்த போது ஈழப்பிரச்சனைக்காக பணம் திரட்டி கொடுத்ததாகவும்,
இப்போது எந்த அரசியல் கட்சிக்கும் உண்மையான் உணர்வு இல்லை, இளைஞர்கள் அவர்களுடைய தொழிலை பார்க்கவே அவர்களுக்கு நேரம் உண்டு, இதைப் பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
இதில் பல எதிர் வாதங்களை வைக்கலாம் என்றாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உங்களால் முடிந்ததை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு முடித்துகொண்டோம்.
மேலும் ஜப்பானில் உள்ள தமிழ் இளைஞர்களும் ஈழப்பிரச்சனையில் அக்கறை செலுத்துகிறார்கள் என்றும் தான் ஜப்பான் சென்ற போது இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டதை இது சம்பந்தமாக விவாதங்களில் கலந்து கொள்ளும் போது நினைவு கூறுவார் என்ற காரணத்திற்காக ஈழப்பிரச்சனை சம்பந்தமான கேள்வியை எழுப்ப வேண்டும் என்ற உறுதியுடனே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றோம்.
இப்படி ஒரு கேள்வியை எழுப்பியது கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை உங்களுடன் பகிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!
நன்றி!
வணக்கம்!