வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலின் கழியும், இவ் உலகத்து
காணீர் என்றலோ அரிதோ அதுநனி
பேணீர் ஆகுவீர்...
தலைவியின் தோழி தலைவனுக்கு உரைப்பாதாக அமைந்த பழந்தமிழ்ப் பாடல்,
வேகமாக விடப்படுகின்ற அம்பின் நிழல்போல இந்த வாழ்க்கையும் இதன் இளமை பருவத்து சுகங்களும் உண்டாகிய வேகம் தெரிவத்ற்க்கு முன்பே மறைந்து கொண்டிருக்கின்றன,என்பதை அறியாதவர் அல்லர் நீங்கள், அதை உணர்ந்து என் தலைவியை விட்டுப்பிரியாமல் அவள் மேல் நீங்கள் அன்பு செலுத்த வேண்டும்.
இந்த பாடலை எழுதிய மனிதரின் கற்ப்பனையை பாருங்களேன்
வாழ்வின் நிலையாமையை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்........
அம்பு புறப்படுகின்றது, புறப்பட்ட வேகத்திலேயே வேகம் குறைந்து விழுகின்றது,
அப்படி இருக்க இந்த இடத்தில் தோன்றி மறைவது அதன் நிழல்.....
வாழ்வில் இளமையின் இன்பத்தை தோன்றிவேகத்திலேயே மறையும் நிழலுக்கு ஒப்பிட்டு,
நீயும் இருப்பாய் உன் காதலியும் இருபாள் நிழல் போல் தோன்றி மறையும் இளமையின் இன்பம் சிறிது காலமே, அந்த நேரத்தையும் வீனடிக்கதே என்று எவ்வளவு நாசுக்காக சொல்கின்றாள் இந்த தோழி.....