கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?
மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;
அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!
தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!
சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!
இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!
அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!
இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!!!
Thursday, March 3, 2011
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்..!
கொண்ட தவம் பலிக்கும்..!
கோடியாண்டு பேர் நிலைக்கும்..!
பருவதத்தில் வதியும் அம்மா
பார்வதி அம்மா!
தெய்வப் பெயரம்மா - இன்று
தெய்வமானீர் அம்மா!
வேலனை எங்கள்
வெற்றித் திருமகனை
மூலனை எங்கள் முதல்வனை
முத்தமிழர் பகையழிக்கும்
காலனை எங்கள் காவலனை
கரிகால் வளவனைக்
கண்ணகிக்குக் கல்லெடுத்த
சேரனைச் செந்தமிழ்
மாமதுரை மன்னன் பாண்டியனை
ஓருருவாய்ப்
பிரபாகரன் என்னும்
பெரும்பெயரில் பெற்றளித்த
தாயே வணக்கங்கள்!
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
வேலுப்பிள்ளையெனும்
வீரத்திருமகனார்
பேர்விளக்க வேண்டிப்
பிரபாகரன் என்னும்
புலியீன்ற தாய்ப்புலியாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்
எட்டு கோடித் தமிழர்
எடுத்து அடி வைப்பதற்குக்
கிட்டாத தலைவன் எனும்
எட்டாத இமயத்தை
ஈன்றளித்த பேரிமயத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
உரிமைக்குப் படை திரட்டி
ஓயாத அலையெழுப்பி
நரிமைக்குக் கரி பூசி
நயவஞ்சகர் அழித்து
நாடாண்ட பெரும் புயலை
ஈன்ற பெரும் புயலாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
ஊரறுத்த சிங்களனை
உறவறுத்த காடையனை
பேரறுத்து ஆர்க்க
பிரபாகரன் என்னும்
பேரிடியை வல்லிடியைப்
பெற்றளித்த பெருவானத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
உலகத் தமிழரெல்லாம்
உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம்பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று!
உரைக்கும் சொல் ஒன்று!
கொள்ளி வைப்பானா பிள்ளை
கொள்ளி வைப்பானா பிள்ளை - எனக்
கோடிமுறை நினைந்து
நைந்திருப்பாய் நலிந்திருப்பாய்!
நாடி தளர்ந்திருப்பாய்!
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடியிடியாய் முழக்கமிட்டு
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டு
கொன்று தீயிலிட்டு அவனுக்குக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொண்டவுன் தவம் பலிக்கும்
கோடியாண்டு உன் பேர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்..!
தலைதாழ்ந்த வணக்கங்கள்..!
கொண்ட தவம் பலிக்கும்..!
கோடியாண்டு பேர் நிலைக்கும்..!
பருவதத்தில் வதியும் அம்மா
பார்வதி அம்மா!
தெய்வப் பெயரம்மா - இன்று
தெய்வமானீர் அம்மா!
வேலனை எங்கள்
வெற்றித் திருமகனை
மூலனை எங்கள் முதல்வனை
முத்தமிழர் பகையழிக்கும்
காலனை எங்கள் காவலனை
கரிகால் வளவனைக்
கண்ணகிக்குக் கல்லெடுத்த
சேரனைச் செந்தமிழ்
மாமதுரை மன்னன் பாண்டியனை
ஓருருவாய்ப்
பிரபாகரன் என்னும்
பெரும்பெயரில் பெற்றளித்த
தாயே வணக்கங்கள்!
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
வேலுப்பிள்ளையெனும்
வீரத்திருமகனார்
பேர்விளக்க வேண்டிப்
பிரபாகரன் என்னும்
புலியீன்ற தாய்ப்புலியாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்
எட்டு கோடித் தமிழர்
எடுத்து அடி வைப்பதற்குக்
கிட்டாத தலைவன் எனும்
எட்டாத இமயத்தை
ஈன்றளித்த பேரிமயத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
உரிமைக்குப் படை திரட்டி
ஓயாத அலையெழுப்பி
நரிமைக்குக் கரி பூசி
நயவஞ்சகர் அழித்து
நாடாண்ட பெரும் புயலை
ஈன்ற பெரும் புயலாம்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
ஊரறுத்த சிங்களனை
உறவறுத்த காடையனை
பேரறுத்து ஆர்க்க
பிரபாகரன் என்னும்
பேரிடியை வல்லிடியைப்
பெற்றளித்த பெருவானத்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
உலகத் தமிழரெல்லாம்
உள்ள உணர்வால்
உகுக்கும் கண்ணீரால்
உம்பாதம் பற்றி நின்று
உரைக்கும் சொல் ஒன்று!
உரைக்கும் சொல் ஒன்று!
கொள்ளி வைப்பானா பிள்ளை
கொள்ளி வைப்பானா பிள்ளை - எனக்
கோடிமுறை நினைந்து
நைந்திருப்பாய் நலிந்திருப்பாய்!
நாடி தளர்ந்திருப்பாய்!
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
குமுறும் எரிமலையாய் வெடித்து
கோடியிடியாய் முழக்கமிட்டு
கொக்கரிக்கும் சிங்களனைக்
கொன்று தீயிலிட்டு
கொன்று தீயிலிட்டு அவனுக்குக்
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொள்ளி வைப்பான் உன் பிள்ளை
கொண்டவுன் தவம் பலிக்கும்
கோடியாண்டு உன் பேர் நிலைக்கும்
தாயே வணக்கங்கள்
தலைதாழ்ந்த வணக்கங்கள்..!
Friday, May 7, 2010
மூதுரை
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ-கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.
(பா-6)
அதிகச் சுமை ஏற்றப்பட்ட கல்தூண், சுமையைத் தாங்க இயலாதபோது, உடைந்து சிதறுமே அல்லாமல் சிறிதும் வளையாது. அது போலவே, மானம் போகும் நிலை ஏற்பட்டால் சான்றோர் உயிரை இழப்பாரே அன்றி, மானம் இழந்து மாற்றானுக்குப் பணிய மாட்டார்கள்.

Tuesday, August 18, 2009
ஜப்பானில் தயாநிதிமாறன்

அமைச்சர் திரு தயாநிதிமாறன் நேற்று (21/07/2009) டோக்கியோ வந்திருந்தார்.
ஜப்பானின் இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்துகொண்ட அமைச்சர் அவர்களை நானும் என்னுடைய நண்பர் பாலமுருகனும் சென்று சந்தித்தோம்.
அமைச்சரை மட்டும் அல்லாமல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள், பெரும் நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்களை சந்தித்த இந்த அனுபவம் புதுமையானதாக இருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஜப்பானிய நிறுவனங்களை ஈர்க்க தான் கையாளும் முறையை எடுத்துக்கூறிய அவர், நம் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி பெரிய பிரச்சனையாகும் என்று கருத்து இருந்தது ஆனால் அதுவே இன்று நமக்கு சாதகமாக மாறி பெரிய மனித வள நாடாகவும், மிகப்பெரிய பொருளாதார சந்தையாகவும் உள்ளது. அதிக்கப்படியான படித்த இளைஞர்களை கொண்ட இந்திய சந்தை அதிகம் வாங்கும் சக்தி படைத்தது,
ஆகையால் ஜப்பானிய நிறுவனங்களை தான் அழைப்பது நம் நாட்டில் வந்து பொருள் வாங்குங்கள் என்று சொல்வதற்கு இல்லை மாறாக நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள் முதலீடு செய்யுங்கள் பொருள்களை தயாரியுங்கள் அங்கேயே விற்று பணமாக்கி பணத்தை உங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிய அவர், இது தனது பொருளாதார மந்திரம் எனவும் பெருமையோடு கூறிக் கொண்டார். (ஆஹா என்ன ஒரு பொருளாதாரக் கொள்கை வெள்ளைக்காரன் அவனே வந்து சுரண்டிகிட்டு போனான், அனால் இன்று நம் நாடு சுதந்திரம் அடைந்து கல்வியிலும் மற்றும் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து பல்துறை வல்லுனர்களையும், மேதாவிகளையும் உருவாக்கி, அவர்கள் சென்று அழைகின்றனர் வாருங்கள் எங்கள் நாட்டுக்கு வந்து எங்கள் நாட்டு செல்வங்களை சுரண்டி எடுத்து செல்லுங்கள் என்று )
நண்பர் பாலமுருகன் ஈழத் தமிழ்ர்களைப் பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தி.மு.க ஈழ தமிழார் நலனுக்காக நாங்களும் பாடுபடுவோம் தனி ஈழம் அமைய பாடுபடுவோம் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு அதைப்பற்றி பேசுவே இல்லையே அது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்க்கு பதிலளித்த அமைச்சர்.
நாங்கள் எதுவும் செய்யாமல் இல்லை, இப்போது கூட மத்திய அரசு மூலமாக 500 கோடி கொடுத்துள்ளோம் என்றார்.
போரில் பல பேர் இறந்தும் அதற்கும் பின்பும் 3 லட்சம் தமிழ்ர்கள் முள்வேலிக்குள் அகப்பட்டு தினம் தினம் துன்பத்திற்க்குள்ளாகும் அவலம் தொடர்கிறதே?
ராஜீவ் மரணத்திற்கு பிறகு இலங்கை பிரச்சனையில் நேரடியாக ஈடுபடமுடியவில்லை என்றும்,
ராஜீவ் கொலையில் தாங்களும் (தி.மு.க) குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை தாழ்வாக எண்ணுவதாகவும்,
80 களில் அவர் மாணவராக இருந்த போது ஈழப்பிரச்சனைக்காக பணம் திரட்டி கொடுத்ததாகவும்,
இப்போது எந்த அரசியல் கட்சிக்கும் உண்மையான் உணர்வு இல்லை, இளைஞர்கள் அவர்களுடைய தொழிலை பார்க்கவே அவர்களுக்கு நேரம் உண்டு, இதைப் பற்றி எல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.
இதில் பல எதிர் வாதங்களை வைக்கலாம் என்றாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உங்களால் முடிந்ததை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு முடித்துகொண்டோம்.
மேலும் ஜப்பானில் உள்ள தமிழ் இளைஞர்களும் ஈழப்பிரச்சனையில் அக்கறை செலுத்துகிறார்கள் என்றும் தான் ஜப்பான் சென்ற போது இப்படி ஒரு கேள்வியை எதிர்கொண்டதை இது சம்பந்தமாக விவாதங்களில் கலந்து கொள்ளும் போது நினைவு கூறுவார் என்ற காரணத்திற்காக ஈழப்பிரச்சனை சம்பந்தமான கேள்வியை எழுப்ப வேண்டும் என்ற உறுதியுடனே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றோம்.
இப்படி ஒரு கேள்வியை எழுப்பியது கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை உங்களுடன் பகிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!
நன்றி!
வணக்கம்!
Thursday, May 21, 2009
இலங்கயில் நடந்த மனிதப்பேரவலத்தை விசாரிக்க வேண்டும்! தமிழர்கள் ஜப்பான் அரசாங்கத்திற்க்கு கோரிக்கை!
「スリランカで人道問題調査を」タミル人が日本政府に要請 政府軍は、「人間の楯」・非戦闘員数十万人に砲撃を浴びせた 田中龍作2009/05/21
国連への働きかけを外務省に要請した在日タミル人(外務省前で筆者撮影)
இந்த மாதம் 18 ஆம் தேதி வரையில் நடந்து முடிந்த இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த சண்டயில் ஏராலமானோர் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமும் அடைந்துள்ளனர். அஙகே நடந்த மனிதப்பேரவலத்தை வெளி உலகுக்கு தெரியபடுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜப்பானில் ஆடோமொபையில் கம்பெனியில் வேலைபார்க்கும் அருள் ராமலிங்கம், பாலமுருகன் காசிநாதன் போன்ற 9 பொறியியலாலர்கள் டோக்யோ கசுமிகாசெகியில் உள்ள வெளியுறவு அலுவலகதிற்க்கு வந்திருந்தனர், இவர்கள் அனைவருமே இந்தியாவின் தமிழ்நாட்டுத் தமிழர்கள. தமிழ்நாட்டுத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் தொப்புள் கொடி உறவுபூண்டவர்கள்.
தீவிரவாததிற்க்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு விடுதலைப்புலிகளின் மீது இலங்கை அரசு தொடுத்த போரில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.ஆனால அங்கு நடந்த இராணுவ தாக்குதலில் இறந்த போன மற்றும் காயமடைந்தவர்களின் சரியான விவரம் வெளிவரவில்லை.எங்கள் உறவுகளின் இந்த சொல்லொன்னா துயரமானது எங்களுக்கு ஆழ்ந்த மன வேதனையை தருகிறது என்று இங்கு வந்திருந்த பாலமுருகன் கூறினார்.
18 ஆம்தேதி நாம் வெளியிட்டுருந்த செய்தி அறிக்கையில், விடுதலைபுலிகளின் மனிதக்கேடயங்கள் இன்று கூறிக்கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தியை சொல்லி இருந்தோம். மருத்துவமனை மற்றும் பள்ளியின் வகுப்பரை மீது இராணுவம் தாக்கிகுதலில் 378 குழந்தைகள் கொல்லபட்டிருந்தனர். இந்த செய்தியை வெளியிட்ட இலங்கை அரசோ இதை விடுதலைப்புலிகல்தான் செய்தனர் என்று கூறிருந்தனர் , ஆனால் உண்மை என்னவென்றால் இந்த தாக்குதல் அரசு இராணுவப் பகுதில் இருந்துதான் வந்தது என்று அங்கு இருந்த மருத்துவரே ப்ர்ர்த்ததாக சொல்லி இருந்தார்.
அனைத்துலக மனிதாபிமான விதிமீறலான இந்த செயலைப் பார்த்த மருத்துவர் காணமல் போய்விட்டார், இவ்வரான போர்ப் பகுதிகளில் உண்மை செய்தியை அறிய பத்திரிக்கையாளர்கள் குழு உள்ளே சென்றுப் பார்ப்பது வழக்கம் ஆனால் அவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இங்கு வந்திருந்த பாலசுப்ரமணியன் இலங்கை அரசு மிகக் கொடுரமான இன அழிப்பை செய்துகொண்டிருகிறது என்று தெரிவித்தார்.
இங்கு வந்திருந்த அருள் ராமலிங்கம் என்பவர் தென்மேற்க்கு ஆசிய துறை சேர்ந்தவர்களிடம் தெரிவித்த செய்தி என்னவென்றால் ஐநா மூலம் முறைப்படி சர்வதேச பத்திரிக்கையாலர்கள் குழு மற்றும் மனித நேய அமைப்புகளை போர்ப்பகுதிக்கு அனுப்பி அங்கே நடப்பவற்றை வெளிக்கொணர ஜப்பான் அரசாங்கம் முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று இங்கு வந்த அனைவரின் சார்பாகவும் கேட்டுக்கொண்டார். இதேப்போன்று கோரிக்கையை இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் அந்த அந்த நாடுகளுக்கும் முன்வைத்துள்ளனர்.
18日まで続いたスリランカ政府軍による反政府武装勢力LTTEへの猛攻では、「人間の楯」となった非戦闘員のタミル人に夥しい数の死傷者が出た。「実態を調査し援助の手を差し伸べてほしい」と在日タミル人たちが20日、外務省に要請した。

国連への働きかけを外務省に要請した在日タミル人(外務省前で筆者撮影)
霞ヶ関に足を運んだのは、日本の自動車メーカーで技術者として働くラマリンガン・アルルさん(30才)、カシナサン・バラムルガンさん(29才)ら9人。いずれもインドのタミルナド州出身だ。3世紀頃、インドのタミル・ナド州から渡って来たとされるスリランカの少数民族タミル人は彼らにとって同胞である。 同胞が政府軍のLTTE掃討作戦で犠牲となった。正確に言うと死傷者の数など惨劇の実態さえ明らかになっていない。バラムルガンさんは「自分の家族が被災したように胸が痛い」と話す。
ODA最大供与国である日本の動きは鈍い。
筆者もJanJan(18日付)「スリランカ血の海…」で報告したが、LTTEがタミル人の非戦闘員数十万人を「人間の楯」にとり、そこに政府軍が砲撃を浴びせた。
小学校の教室となっていた野戦病院が爆撃され、児童を含む378人が死亡した。政府軍スポークマンは「LTTEの仕業だ」と主張するが、病院の医師は「砲弾は政府軍の支配地域から飛んできた」と証言する。
国際人道法に違反する病院への攻撃の実態を知っている医師が行方不明になっている、との情報もある。被害の実態を明らかにするためにもジャーナリストや援助団体を、戦闘があった地域に入れるべきだが、スリランカ政府は拒んでいる。 外務省を訪れた一行の一人ラバスブラマニアンさん(28才)は「ジェノサイド(集団虐殺)があった」と主張する。
ラマリンガン・アルルさんらは外務省アジア大洋州局南西アジア課の課員に「『国連が正式な調査団を入れるよう』日本政府は働きかけてほしい」とする要請文を手渡した。イギリスなどでもタミル人が国連への働きかけを政府に求めている。
****************************************
செய்தியின் தமிழாக்கம்!
இலங்கயில் நடந்த மனிதப்பேரவலத்தை விசாரிக்க வேண்டும்! தமிழர்கள் ஜப்பான் அரசாங்கத்திற்க்கு கோரிக்கை! இலங்கை அரசு இராணுவம் பாதுகாப்பு வலையத்தில் இருந்த ஒரு லட்ச்சம் மக்கள் மீது குண்டுமழை!
இந்த மாதம் 18 ஆம் தேதி வரையில் நடந்து முடிந்த இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த சண்டயில் ஏராலமானோர் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமும் அடைந்துள்ளனர். அஙகே நடந்த மனிதப்பேரவலத்தை வெளி உலகுக்கு தெரியபடுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜப்பானில் ஆடோமொபையில் கம்பெனியில் வேலைபார்க்கும் அருள் ராமலிங்கம், பாலமுருகன் காசிநாதன் போன்ற 9 பொறியியலாலர்கள் டோக்யோ கசுமிகாசெகியில் உள்ள வெளியுறவு அலுவலகதிற்க்கு வந்திருந்தனர், இவர்கள் அனைவருமே இந்தியாவின் தமிழ்நாட்டுத் தமிழர்கள. தமிழ்நாட்டுத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் தொப்புள் கொடி உறவுபூண்டவர்கள்.
தீவிரவாததிற்க்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு விடுதலைப்புலிகளின் மீது இலங்கை அரசு தொடுத்த போரில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.ஆனால அங்கு நடந்த இராணுவ தாக்குதலில் இறந்த போன மற்றும் காயமடைந்தவர்களின் சரியான விவரம் வெளிவரவில்லை.எங்கள் உறவுகளின் இந்த சொல்லொன்னா துயரமானது எங்களுக்கு ஆழ்ந்த மன வேதனையை தருகிறது என்று இங்கு வந்திருந்த பாலமுருகன் கூறினார்.
18 ஆம்தேதி நாம் வெளியிட்டுருந்த செய்தி அறிக்கையில், விடுதலைபுலிகளின் மனிதக்கேடயங்கள் இன்று கூறிக்கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தியை சொல்லி இருந்தோம். மருத்துவமனை மற்றும் பள்ளியின் வகுப்பரை மீது இராணுவம் தாக்கிகுதலில் 378 குழந்தைகள் கொல்லபட்டிருந்தனர். இந்த செய்தியை வெளியிட்ட இலங்கை அரசோ இதை விடுதலைப்புலிகல்தான் செய்தனர் என்று கூறிருந்தனர் , ஆனால் உண்மை என்னவென்றால் இந்த தாக்குதல் அரசு இராணுவப் பகுதில் இருந்துதான் வந்தது என்று அங்கு இருந்த மருத்துவரே ப்ர்ர்த்ததாக சொல்லி இருந்தார்.
அனைத்துலக மனிதாபிமான விதிமீறலான இந்த செயலைப் பார்த்த மருத்துவர் காணமல் போய்விட்டார், இவ்வரான போர்ப் பகுதிகளில் உண்மை செய்தியை அறிய பத்திரிக்கையாளர்கள் குழு உள்ளே சென்றுப் பார்ப்பது வழக்கம் ஆனால் அவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இங்கு வந்திருந்த பாலசுப்ரமணியன் இலங்கை அரசு மிகக் கொடுரமான இன அழிப்பை செய்துகொண்டிருகிறது என்று தெரிவித்தார்.
இங்கு வந்திருந்த அருள் ராமலிங்கம் என்பவர் தென்மேற்க்கு ஆசிய துறை சேர்ந்தவர்களிடம் தெரிவித்த செய்தி என்னவென்றால் ஐநா மூலம் முறைப்படி சர்வதேச பத்திரிக்கையாலர்கள் குழு மற்றும் மனித நேய அமைப்புகளை போர்ப்பகுதிக்கு அனுப்பி அங்கே நடப்பவற்றை வெளிக்கொணர ஜப்பான் அரசாங்கம் முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று இங்கு வந்த அனைவரின் சார்பாகவும் கேட்டுக்கொண்டார். இதேப்போன்று கோரிக்கையை இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் அந்த அந்த நாடுகளுக்கும் முன்வைத்துள்ளனர்.
Saturday, January 31, 2009
இனத்திற்க்காக இன்னுயிரை ஈந்த முத்துகுமரன் அவர்களுக்கு வீர வணக்கம்!!!

இனத்திற்க்காக இன்னுயிரை ஈந்த முத்துகுமரன் அவர்களுக்கு வீர வணக்கங்கள்!!!
செய்வதறியாது தவித்து நிற்கின்றது உலகத் தமிழினம்........கண்டிப்பாக அரசியல் கட்சி தலைவர்களைத் தவிர ஒவ்வொரு தமிழினும் குமுறிக்கொண்டிருகிறான் ஈழத்தமிழினத்தின் நிலைக் கண்டு........முத்துகுமரா ஏனப்பா இப்படி செய்தாய், அறிவு தளத்தில் போரிடும் போர்வீரன் உம்மை இழந்தது தமிழினத்தின் பெரிய இழப்பு இல்லையா?எப்படியப்பா உனக்கு இவ்வளவு துனிச்சல் வந்தது உமது உயிரை மாய்த்துக்கொள்ள?வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடாதவர்கள் மத்தியில் நீ உன் உயிரை துச்சமாய் நினைத்து தீக்கு இரையாகியிருகிறாய்.........வியக்க வைக்கின்றது உம் இனப்பற்று!!!உன்னை நம்பி இருக்கும் உம் குடும்பத்தினரை மீளாத்துயரில் விட்டுவிட்டு நீ மீளாமல் போய்விட்டயே!அவர்களுக்கு அறுதல் யாரால் சொல்லமுடியும்?நீ இட்ட தீ திக்கெட்டும் பரவட்டும் தமிழின எழுச்சி தீயாக!அது பெற்றடுக்கட்டும் நம் இன விடுதலையை..........இனத்திற்க்காக இன்னுயிரை ஈந்த மறவர்குல தமிழா!உமக்கு என் வீர வணக்கங்கள்!!! .............தீ குளிக்கும் முன் அவர் வினியோகித்த அறிக்கை...
Friday, November 14, 2008
ஈத்துவக்கும் இன்பம்!
முனைவர் ப.பத்மநாபன்.
""தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்'' என்றான் தேசியக்கவி பாரதி. பசியால் ஒரு தனிமனிதன் கூட வாடக்கூடாது என்பது அவனது கொள்கை. பசியைப் பிணியாக உருவகப் படுத்தியிருக்கிறான் தமிழ்ப்புலவன். எனவே உணவு, பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்தாகிறது. பசியைப் பற்றிக் கூறவரும் மணிமேகலை.
"" குடிபிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்வி பெரும்புனை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னுமோர் பாவி''
என்று கூறுகிறது. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும் குமரகுருபரர்
"" மானம் குலம்கல்வி வண்மை அறிவுடமை
தானம் தவமுயற்சி தாளாண்மை- தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்''
என பத்து குணங்களைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
எனவே பசி ஒருவனுடைய அனைத்து நல்ல குணங்களையும் இழக்கச் செய்துவிடும். எனவேதான் மணிமேகலை "" ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை'' என்றும் "" மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே'' என்றும் கூறுகிறது.
சங்ககாலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. ஒருபுலவனின் இல்லத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. புலவனைப் பெற்ற தாய் "" பசியால் வாடுகிறேனே, என்னுயிர் இன்னும் போகவில்லையே'' என்று நோகிறாள். புலவனுக்கு நிறைய பிள்ளைகள். மனைவியின் மெலிந்த உடல், உணவின்றி வாடும் ஒட்டிப்போன வயிறு. தாய்ப்பாலுக்கு ஏங்கும் கைக்குழந்தை. அடுப்பில் பூனை தூங்குகிறது. குழந்தைகளுக்கு ஏதோதோ கதைகளைக் கூறி அவைகளின் கவனத்தைத் திருப்ப முனைகிறாள் தாய். ஆனால் குழந்தைகள் பசியால் வாடி வதங்குகின்றன. உணவு கேட்டு அடம்பிடிக்கின்றன.
இப்பிள்ளைகளின் பசியைத் தீர்க்க வேறு வழியில்லாத சூழலில் குப்பைக் கீரையைப் பறித்து உப்புக்குக் கூட வழியில்லாமல் உப்பில்லாமல் குப்பைக் கீரையைச் சமைத்துத் தருகிறாள். இக்காட்சிகளைக் காணும் குடும்பத்தலைவனான புலவனின் உள்ளம் வருந்துகிறது. தனது நல்குரவைப் போக்குபவர் யார் எனச் சிந்திக்கிறான். விடையும் காண்கிறான். அந்தப் பசிப்பிணி மருத்துவனை நோக்கிப் புறப்படுகிறான்.
"" குமண வள்ளலே, பாரி முதலாகிய ஏழுவள்ளல்கள் மறைந்த பின்னர் எல்லோர்க்கும் கொடுக்கின்ற வள்ளல் நீ என எல்லோரும் உன்னை நாடி வருகின்றனர். யானும் பசிப்பிணிக் கொடுமையால் வறுமை துரத்த உன்னை நாடி வந்துள்ளேன். உன் வள்ளண்மை வாழ்க'' என்று வாழ்த்துகிறான். வறுமையையும் எடுத்துக் கூறுகிறான்.
புலவனின் வறுமையைக் கேட்ட புரவலனின் நெஞ்சம் பதறுகிறது. "" ஐயோ! என்ன கொடுமை இது? இவ்வளவு வறுமை உங்களை வாட்டி இருக்கிறதே, நீங்கள் முன்பே என்னிடம் கூறியிருக்கலாமே'' என வருந்திக் குமண வள்ளல் நிறைய செல்வத்தையும் பொருளையும் வண்டிகளில் புலவனுக்குக் கொடுத்தனுப்புகிறான். புலவன் பெருஞ்செல்வத்தோடு வீடு வந்து சேர்கிறான்.
அதன்பின் நடக்கின்ற நிகழ்ச்சியில்தான் ஒரு தமிழ்ப்புலவனின் தமிழ்ப்பண்பைக் காண்கிறோம். பொருட்குவியலோடு வந்த புலவன் தன்மனைவியை அழைத்துப் பின்வருமாறு கூறுகிறான். ""என் இனிய மனையாளே! குமண வள்ளல் கொடுத்த இந்தச் செல்வத்தை உன்னை விரும்பி வருபவர்க்கும், நீ யாரை விரும்புகிறாயோ அவர்களுக்கும், உன்னுடைய சுற்றத்தார் யாவர்க்கும், வறுமையால் வாடி உன்னை நாடி வரும் அனைவருக்கும் யார் எவர் எனப் பார்க்காது என்னையும் கேட்காமல் உன் விருப்பம் போல் எல்லோருக்கும் கொடுத்துதவுவாய். நமக்கென்று எதையும் ஒதுக்காதே'' என்று கூறுகிறான். கணவனின் குறிப்பறிந்த மனைவி எல்லோர்க்கும் அச்செல்வத்தை வாரி வரையாது வழங்குகிறாள்.
அவன் மனைவியைப் பார்த்துப் பாடிய பாடல்:
நின்நயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மான் கற்பின் நின்கிளை முதலோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னாது என்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே
(புறம்- 163)
பெருஞ்சித்திரனார் குமணனிடம் பெற்று வந்த செல்வத்தைத் தானும் தன்குடும்பத்தார் மட்டுமே பயன்துய்க்க வேண்டும் என்று எண்ணவில்லை. அச்செல்வத்தை இல்லை என வந்தோர் அனைவருக்கும் கொடுக்கச் சொன்னது மட்டுமில்லாது அவ்வாறு கொடுக்க மனைவி தன்னுடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை என்று கூறுகிறார்.
உலகில் பல இடங்களில் வறுமையும் பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடுகின்றன. தனக்கு மிஞ்சித்தான் தருமம் என்கின்றனர் சிலர். வள்ளுவன் ""ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு'' என்றும் ""ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்திழக்கும் வண்கண வர்''என்றும் கூறுகிறார்.
குமணன் முதலான வள்ளல் பெருமக்கள் பசிப் பிணியை நீக்க உணவென்னும் மருந்தை வரையாது வாரி வழங்கியவர். ஆனால் அவ்வாறு வழங்காது அவ்வுணவென்னும் மருந்தைத் தம்கண் வைத்திருந்து தாமே தேவைக்குமேல் அனுபவிக்க எண்ணுபவரைத்தாம் ""வண்கணவர்'' என வள்ளுவர் சாடுகிறார்.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர் வள்ளலார் கூட பசிப்பிணியைப் போக்குவதையே தலைமை அறமாக வற்புறுத்துகிறார்.
அளவுக்கு மீறிச் சேர்த்து வைக்கப்படும் மருந்துகூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் கெட்டுப்போகும். எனவே பசி, பிணியாக மாறினால் உணவு மருந்தாக வேண்டும். அந்தப்பசியை நீக்கும் உணவாகிய மருந்தைத் தருபவன் பசிப்பிணி மருத்துவன் ஆகிறான். சங்ககால வள்ளல் பெருமக்கள் அனைவரும் பசிப்பிணி மருத்துவர்களாக விளங்கினர்.
இன்றும் பசி என்று வருவோர்க்கு இல்லையெனாது மனமுவந்து உணவு வழங்கும் அனைவரும் பசிப்பிணி மருத்துவரே. இந்த வகையில் உலகநாடுகள் ஒன்றுக்கொன்று உதவவேண்டும். வளத்தாலும் நலத்தாலும் வளர்ந்த நாடுகள் வறுமையுடன் போராடும் நாடுகளுக்கு உதவவேண்டும்.
ஓளவையார் ""கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை'' என்றார். கொடிய வறுமையைச் சந்தித்த புலவர் பெருஞ்சித்திரனார் புரவலராகவே உயர்ந்து நின்றார். இதுதான் அன்றைய தமிழ்புலவனின் பேருள்ளம்.
நன்றி: தினமணி.

Subscribe to:
Posts (Atom)